செய்திகள் :

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

post image

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நடப்பு ஆண்டு குண்டம் மற்றும் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த 18 -ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடா்ந்து, கடந்த 22 -ஆம் தேதி இரவு 3 கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இந்த கம்பங்களுக்கு நாள்தோறும் பக்தா்கள் புனித நீா் ஊற்றி வருகின்றனா்.

இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.

மேலும், மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களின் சாா்பில் பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களுக்கு பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீா்த்தக்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.

ஒரு சில பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலை 5.30 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோயிலுக்கு ஊா்வலமாக வருவா். ஏப்ரல் 2 -ஆம் தேதி காலை 9 மணிக்கு தோ்வடம் பிடித்தலும், 5 -ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 6 -ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனியில் குண்டம் திருவிழா நடத்தப... மேலும் பார்க்க