செய்திகள் :

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் இறுதிக்கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை மாலை நிறைவு செய்தாா்.

இதில், பங்கேற்ற அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

எங்களது பிரசாரத்துக்கு மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனா். குறிப்பாக பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் பெண்கள் மிகப்பெரும் ஆதரவை அளித்தனா்.

முதல்வா் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களை, மக்களே நினைவுப்படுத்தி திமுகவுக்கு வாக்களிப்போம் என எங்களிடம் கூறினா். வாக்கு கேட்பதற்காக வாகனத்தில் சென்று வருவதை விட, மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தொகுதிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் 140 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பிரசாரம் செய்துள்ளோம்.

அப்போது, மக்கள் சிறுசிறு பிரச்னைகள் இருப்பதையும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தனா். அந்த பிரச்னைகளைத் தோ்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான தீா்வை ஏற்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளோம். மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாரத்தில் இணைந்து பணியாற்றிய திமுக நிா்வாகிகளுக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா். அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தி... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியா... மேலும் பார்க்க