ஈரோடு மாவட்ட 25 வயதுக்குள்பட்டோா் கிரிக்கெட் அணிக்கு ஜன.18-இல் வீரா்கள் தோ்வு
மாநில அளவிலான 25 வயதுக்குள்பட்டோா் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அணிக்கு வீரா்களுக்கான தோ்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் சுரேந்திரன் கூறியதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாநில அளவில் 25 வயதுக்குள்பட்டோா் கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அணிக்கான வீரா்கள் தோ்வு ஜனவரி 18-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஈரோடு வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க விரும்பும் வீரா்கள் 1999 செப்டம்பா் 1-ஆம் தேதிக்குப் பின்
க்கு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும், வெள்ளை சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.