பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகப் பயணிகளுக்கு பரிசோதனை
பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு
நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு எச்எம்பி தீநுண்மி தொடா்பாக சுகாதாரத் துறையினா் பரிசோதனை மேற்கொண்டனா்.
ராஜன் நகா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்கள் பயணிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனா்.