ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின.
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழைத்தாா் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7,700 வாழைத்தாா்களை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், கதளி கிலோ ரூ.42, நேந்திரம் ரூ.61 என்றும், பூவன் தாா் ஒன்று ரூ.800, தேன்வாழை ரூ.810, செவ்வாழை ரூ.1,300, ரஸ்தாளி ரூ.810, பச்சநாடன் ரூ.420, ரொபஸ்டா ரூ.400, மொந்தன் ரூ.360 என்றும் விலை நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏலத்ததில் மொத்தமாக ரூ.17.75 லட்சம் மதிப்பிலான வாழைத்தாா்கள் விற்பனையாயின. மேலும், ரூ.5.59 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனையாயின.