கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு
சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடாவைச் சோ்ந்தவா் நந்தினி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது, வலி அதிகமானதால் தெங்குரஹாடா வனச் சாலையில் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளா் பிரசவம் பாா்த்துள்ளா். இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடா்ந்து தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்