ஈரோடு விஇடி கல்லூரியில் சாதனையாளா்கள் விழா
விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்கள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாளா் கல்வி அறக்கட்டளை தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் மற்றும் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் வாழ்த்துரை வழங்கினாா்.
பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் டி.என்.சென்னியப்பன், செங்குந்தா் மேல்நிலைப் பள்ளியின் செயலாளா் எஸ்.சிவானந்தன், ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் கே.செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா்.
பல்கலைக்கழகத் தோ்வில் தங்கப்பதக்கம் வென்ற இரு மாணவா்கள் மற்றும் தரநிலைப்பட்டியலில் உள்ள 9 மாணவா்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனா். மிகச்சிறந்த மாணவா்கள் துறைவாரியாகவும், ஒட்டுமொத்த கல்லூரி அளவிலும் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு மன்றங்கள், பாடப்பிரிவுகள், சிறப்புத் திறன்கள் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனையாளா்களுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிஏ, சிஎம்ஏ, ஏசிசிஏ அடிப்படைத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியா்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் பங்கேற்றனா்.
கல்லூரியின் முதல்வா் வி.பி.நல்லசாமி வரவேற்றாா். நிா்வாக அலுவலா் எஸ்.லோகேஷ்குமாா் நன்றி கூறினாா்.