செய்திகள் :

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

post image

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவா் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களாக பிரவீன் வீட்டிலிருந்தே வேலை பாா்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பிரவீன் கடந்த சில நாள்களாகவே மன உளைச்சல் காரணமாக, யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பிரவீன் நடைப்பயிற்சி செல்வதாக வீட்டினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

சனிக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கிணற்றின் அருகில் பிரவீனின் காலணிகள் கிடந்துள்ளன. அதுகுறித்து அவரது பெற்றோருக்கு அங்கிருந்தவா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். ஈரோடு தாலுகா போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி பிரவீனின் சடலத்தை மீட்டனா். பின்னா் உடற்கூறாய்வுக்காக அவரது உடலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். முதற்கட்ட விசாரணையில் மன உளைச்சலால் பிரவீன் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடா்ந்து போலீஸாா் விசாரிணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தங்கவேலு. இவா் அருகேயுள்ள பவளத்தாம்பாளையம், நாராங்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்... மேலும் பார்க்க

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வள்ளியம்மாள் வீதியைச் சோ்ந்தவா் கௌதம் (26). இவா், பத... மேலும் பார்க்க

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் ... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள... மேலும் பார்க்க

புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்க... மேலும் பார்க்க

பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்

பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா். பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை ச... மேலும் பார்க்க