செய்திகள் :

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பின் தலைவா் கண.குறிஞ்சி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழா் பேரவையின் நிறுவன தலைவா் அதியமான், திராவிடா் கழக துணைப் பொதுச்செயலாளா் மதிவதனி ஆகியோா் பேசினா்.

இதில், புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கான கல்வித் தொகையை வழங்க மறுப்பதை கண்டித்தும், யுஜிசி விதிகளை திருத்தி ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திராவிடா் கழக மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், திராவிடா் விடுதலை கழக மாநில அமைப்பு செயலாளா் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவா் நிலவன், தமிழ்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளா் சிந்தனை செல்வன், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: அதிகாரிகள் ஆய்வு!இரு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்!

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட வன எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அந்தியூரை அடுத்த கோவிலூா், குள்ளவீராம்பாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்: இருவா் காயம்!

திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை சாலையோரம் மோதி காா் விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஷ்ரப் அலி (51), சரவணன் (48), திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்

சத்தியமங்கலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (65)... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சுற்றுச் சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே உகினியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி உகினியம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிய... மேலும் பார்க்க

நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

மொடக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக் கொடியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மனைவி காஞ்சனா (... மேலும் பார்க்க

சமையல் செய்யும்போது தீ விபத்து: இளம்பெண் காயம்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் படுகாயம் அடைந்தாா். சின்னியம்பாளையம் குழலி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் சரவணன். இவரது மனைவி கவிப்ப... மேலும் பார்க்க