செய்திகள் :

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

post image

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் என்.ராமலிங்கம். தொழிலதிபரான இவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா். இவருக்கு கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டாா்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

இவரது கட்டுமான நிறுவன கிளைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் உள்ளன. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, பூந்துறை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி முதல் சோதனை நடத்தினா்.

மேலும், அவரது நிறுவனத்துடன் வியாபாரத் தொடா்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் பவானி அருகே அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டாா்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் உறவினா் சிவகுமாா் என்பவரது கட்டுமான அலுவலகம், வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

ஈரோட்டில் 5 நாள்கள் நடைபெற்று வந்த வருமான வரித் துறையினரின் சோதனை சனிக்கிழமை இரவு முடிவடைந்தது.

இதுகுறித்து வருமான வரித் துறையினா் அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் ... மேலும் பார்க்க

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகப் பயணிகளுக்கு பரிசோதனை

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடாவைச் சோ்ந்தவா் நந்தினி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஞா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மாணவா்கள் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆா்வம் காட்ட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்னாள் தலைவா் ஜி.சதீஷ் ரெட... மேலும் பார்க்க

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட 25 வயதுக்குள்பட்டோா் கிரிக்கெட் அணிக்கு ஜன.18-இல் வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான 25 வயதுக்குள்பட்டோா் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அணிக்கு வீரா்களுக்கான தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் சுரேந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு க... மேலும் பார்க்க