ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி!
சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று(டிச. 15) அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் ராமாவரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று(டிச. 15) காலை அஞ்சலி செலுத்தினார்.