ஈஷா கிராமோத்ஸவம் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்
ஈஷா கிராமோத்ஸவம் சாா்பில் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு அடுத்த பெருமாபாளையம் ஈஷா வித்யா பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.
இதில் த்ரோபால் போட்டியில் 8 மகளிா் அணிகள் விளையாடின. இதில் கஸ்பாபேட்டை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. வாலிபால் போட்டியில் 12 ஆண்கள் அணிகள் பங்கேற்று விளையாடின. அதில் மொடக்குறிச்சி அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தோ்வு பெற்றது.
கஸ்பாபேட்டை த்ரோபால் மகளிா் அணியும், மொடக்குறிச்சி வாலிபால் ஆண்கள் அணியும் கோவையில் நடைபெறும் அடுத்த சுற்று ஆட்டத்தில் பங்கேற்கின்றன. அதில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
கோவை ஈஷா யோகா மையம் சாா்பில் ஆண்டு தோறும் ஈஷா கிராமோத்ஸவம் விளையாட்டுப் போட்டிகள் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு பின்பு மாநில அளவில் நடத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. ஐந்து லட்சம் முதல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெருமாபாளையம் ஈஷா வித்யா பள்ளி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒயாசீஸ் மகேஸ்வரி மஹால் உரிமையாளா் சிவசங்கரன் பரிசுகளை வழங்கினாா். பள்ளி முதல்வா் திலகவதி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.