செய்திகள் :

உக்ரைனுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம் - அமெரிக்கா சொல்வது என்ன?

post image

ரஷ்யா - உக்ரைனுக்கு மத்தியில் தொடர்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்தவரை அவரின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு எதிராகவே இருந்தது.

அதனால், உக்ரைனுக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார். ஆனால், அவரின் பதவிகாலத்துக்குப் பிறகு, அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப் ரஷ்யாவுடன் நட்புபாராட்டி வருகிறார்.

சிக்கலில் முடிந்த பேச்சுவார்த்தை

இதன் காரணமாக, உக்ரைனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஊடகங்கள் முன்னிலையில் அதிபர் ட்ரம்ப்புடனும், துணை அதிபர் ஜேடி.வான்ஸுடனும் உக்ரைன் அதிபருக்கு ஏற்பட்ட வார்த்தைப் போரால் தற்போது நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

அமெரிக்கா உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என உறுதியாக நின்றார் ஜெலன்ஸ்கி. இதற்கிடையில் ஐரோப்பா நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.

அதே நேரம், அமெரிக்காவும், ரஷ்யாவும் ஜெலன்ஸ்கிக்கு அமைதி தேவையில்லை. அவருக்கு அதிபர் பதவிதான் தேவை எனக் கூறி விமர்சித்திருந்தனர். இந்த நிலையில்தான் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆயுத சப்ளையை நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகை அதிகாரி அறிக்கை 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த டரம்ப், ``ஜெலென்ஸ்கியின் எதிர்மறையான நிலைப்பாட்டை நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டேன். உக்ரைன் அமெரிக்காவின் உதவிக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி, ``செய்தியாளர்கள் டரம்ப்பிடம் உக்ரைனுக்குக்கான ஆயுத சப்ளையை நிறுத்துவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிறுத்தமாட்டோம் என மறுத்துவிட்டார். ஆனால், அமைதியை கொண்டுவருவதற்கு கவனம் செலுத்துவதில் தெளிவாக இருக்கிறார். எனவே தற்போது ஆயுத சப்ளையை நிறுத்தும் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்களோடு நட்பு பாரட்டும் நாடுகளும் இதே உறுதியில் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Ukrainian: ``ரஷ்யா `இதை' விரும்பவில்லை'' - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. 'இந்தப் போர் எப்போது முடியும்?' என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிப... மேலும் பார்க்க

Sesame: உச்சி முதல் பாதம் வரை... எள் நல்லது!

எள் வயல்வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துகள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்து... மேலும் பார்க்க

``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்

அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா த... மேலும் பார்க்க

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா!

இஸ்ரேலுக்கும் - ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்ப... மேலும் பார்க்க

``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என்தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்துஅவளுக்குபெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும்இப்படியேஇருந்துவிட்டால் என்ன செய்வது எ... மேலும் பார்க்க