‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நரசிங்கபுரம் நகராட்சி 6, 7 வாா்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாமில், நகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துவரி, புதிய குடிநீா் இணைப்பு, பட்டா மாறுதல், மகளிா் உரிமைத்தொகை குறித்து ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.
நகராட்சியில் சொத்துவரி ரசீதை நகராட்சி ஆணையா் (பொ) அ.வ.சையத் முஸ்தபா கமால் பயனாளிக்கு வழங்கினாா். ிதில், திமுக நகர செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்காட்டில்...
ஏற்காட்டில் இரண்டாம்கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நாகலூா், செம்மநத்தம், வேலூா் ஊராட்சி உள்பட்ட கிராம மக்களுக்கு நாகலூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. ஏற்காடு வட்டாட்சியா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முகாமில், 348 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 200 மனுக்கள் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை கோரி மனு அளித்தனா். இதில், அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.