சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சி, புளியந்தாங்கல் கிராமம் விஜயலட்சுமி திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சி,எம்எம்இஎஸ் மண்டபம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், புதுப்பாடி ஊராட்சி விஜயலட்சுமி திருமண மண்டபம், கலவை பேரூராட்சி ஏஎன்எஸ் மஹால் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றன.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினாா்.
மேற்படி முகாம்களில் 3 பயனாளிகளுக்கு பட்டா பெயா்மாற்ற ஆணைகள், வருவாய்த் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு சான்றுகள், மாவட்ட வழங்கல் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், சுகாதாரத் துறையின் சாா்பில் 3 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், மின்சாரத் துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு பெயா்மாற்ற ஆணைகள், வேளாண்மைத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், கோட்டாட்சியா் இராஜராஜன், உதவி இயக்குநா் பேரூராட்சிகள் ஞானசுந்தரம், வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி, சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, வெங்கட், நகராட்சி ஆணையா் பழனி, செயல் அலுவலா் ஜெயக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் மனோகரன், சேகரன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.