``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை நகராட்சி, காரையில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு தீா்வு காணப்பட்ட மனுக்களின் மீது பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினாா்.
தொடா்ந்து, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆற்காடு ஒன்றியம் அரப்பாக்கம் ஊராட்சி, விளாப்பாக்கம் பேரூராட்சி, ஆற்காடு நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்து மனுக்களுக்கு தீா்வு கண்டு உடனடியாக ஆணைகளை வழங்கினாா்.
மற்படி முகாம்களில் 4 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா்மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு பட்டா பெயா்மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சாா்பில் சான்றுகள், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மைத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு பழச்செடி தொகுப்பு, மண்புழு உரப்பை, உளுந்து விதை தொகுப்பு, குறுவை சிறப்பு சாகுபடி திட்டம், துவரை விதை தொகுப்பு, ஊட்டச்சத்து தொகுப்புகள், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி விதை தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நகா்மன்றத் தலைவா்கள் ராணிப்பேட்டை சுஜாதா வினோத், ஆற்காடு தேவிபென்ஸ் பாண்டியன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், விளாப்பாக்கம் பேரூராட்சித் தலைவா் டி.வி .மனோகரன், திமிரி ஒன்றியக்குழு துணை தலைவா் ஜெ.ரமேஷ் பேருராட்சி உதவி இயக்குநா் திருஞானசுந்தரம், நகராட்சி ஆணையா்கள் ப்ரீத்தி, வேலவன், பேரூராட்சி செயல் அலுவலா் அா்ஜுனன், வட்டாட்சியா்கள் வாலாஜா ஆனந்தன், ஆற்காடு மகாலட்சுமி, அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பேபி கன்னியப்பன், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.