செய்திகள் :

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் நண்பர் ராஜாராமுடன் முத்தையம்பட்டி மதுக்கடையில் மதுவாங்கி அருகே உள்ள கடையில் வைத்து குதித்திருக்கிறார், முத்துக்குமார். அப்போது அங்கிருந்த தேனியைச் சேர்ந்த பொன்வண்ணன், பிரகாஸ், பாஸ்கரன், சிவனேசன் ஆகியோர் மதுபோதையில் இருந்துள்ளனர்.

கொலையான முத்துக்குமார்

ஏற்கெனவே முத்துக்குமாருக்கு, பொன்வண்ணன் உடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பொன்வண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கவும், பொன்வண்ணன் தரப்பு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து முத்துக்குமார், ராஜாராமும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த பொன்வண்ணன் தரப்பினர், முத்துக்குமார் மற்றும் ராஜாராமை மீண்டும் சரமாரியாக தாக்கி அருகே கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கியதில் முத்துக்குமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.

பொன்வண்ணன் தரப்பு அங்கிருந்து தப்பினர். அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் தேனி வருசநாடு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தென்மண்டல ஐ.ஐி., பிரேம் ஆனந்த் சின்ஹா, திண்டுக்கல் டி.ஐ.ஜி, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 4 எஸ்.பி., தலைமையிலான போலீஸார், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்டப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கம்பம் மெட்டு அடிவாரப்பகுதியில் வைத்து பிடிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொன்வண்ணன் காயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொன்வண்ணன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``வருசநாடு மலை முழுவதும் போலீஸார் பல டீம்களாக பிரிந்து தேடினோம். ஆனால் பொன்வண்ணன் தரப்பு வருசமலையில் இருந்து கேரளா தப்ப முயன்றது தெரியவந்தது. இதனால் தப்ப முடியாத வகையில் எல்லைப்பகுதிகளில் போலீஸாரை நிறுத்தியிருந்தோம். இதனால் அவர்கள் கம்பம் மெட்டு வழியாக கேரளா தப்ப முயன்றனர். அவரைப் பின்தொடர்ந்து பிடிக்க முயன்றபோது, எதிர்தாக்குதல் நடந்த வந்த பொன்வண்ணன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் பொன்வண்ணனுக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

கம்பம் அரசு மருத்துவமனை

அவரை உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தோம். பிறகு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். இவ்வழக்கில் தொடர்புடைய பிரகாஸ், பாஸ்கரன், சிவனேசன் ஆகியோரையும் கைது செய்துள்ளோம். கஞ்சா வியாபாரம் செய்துவந்த பொன்வண்ணன் உள்ளிட்ட 4 பேரும் ரௌடி பட்டியலில் உள்ளவர்கள். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க