3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை பயிற்சியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
"உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசியலமைப்பு அதிகாரத்தை குறைக்கிறது
ஆளுநர்கள் அனுப்பும் மசோதா தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாம் எங்கே செல்கிறோம்? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? நாம் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருக்க வேண்டும். யாரேனும் மறுஆய்வு தாக்கல் செய்கிறார்களா, இல்லையா என்பது பிரச்னை அல்ல. நாங்கள் ஒருபோதும் ஜனநாயகத்திற்காக பேரம் பேசவில்லை. குடியரசுத்தலைவர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையென்றால் அது சட்டமாகிறது.
குடியரசுத்தலைவரை நீதிமன்றம் இவ்வாறு வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. அரசமைப்பின் 145(3) பிரிவை விளக்குவதுதான் நீதிமன்றத்தின் ஒரே உரிமை. அதற்கும் அமர்வில் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போல உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம்போல செயல்படுகிறது. சட்டம் இயற்றுவது போன்ற நாடாளுமன்றத்தின் பணிகளை நீதிமன்றம் செய்கிறது" என்று பேசியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஜகதீப் தன்கர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.