உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு புதிய பேருந்து சேவை
உடன்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு பல்வேறு கிராமங்களை இணைத்து புதிய பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், துணைத் தலைவா் மால்ராஜேஷ், நாகா்கோவில் போக்குவரத்துக் கழக மேலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், தூத்துக்குடி போக்குவரத்துக் கழக மேலாளா் ஜெரோலின், உடன்குடி ஒன்றிய திமுக செயலா்கள் பாலசிங், இளங்கோ, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபா் மோசஸ், ஜெயப்பிரகாஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், பஷீா், செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.