செய்திகள் :

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

post image

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக காதலையும், செக்ஸையும் உளவு பார்க்கும் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாகக் எச்சரித்துள்ளது அமெரிக்க உளவுத்துறை.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் அந்த வல்லுநர், ஒரு கூட்டத்தில் அப்பெண்ணை சந்திக்கிறார். அப்பெண் புத்திசாலியாகவும், வசீகரமாகவும், அவனது வேலையில் உண்மையான ஆர்வமுள்ளவளாகவும் தெரிகிறார். அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் தொழில்நுட்ப எல்லையிலிருந்து ரகசியங்களை எடுத்து அனுப்ப, வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பெண் இருப்பதை அந்த வல்லுநர் உணர்கிறார். இதுதான் இன்றைய சிலிக்கான் பள்ளத்தாக்கில் உளவு பார்ப்பதன் யதார்த்தம் என்கிறார்கள். இவை அனைத்தும் தற்செயலாகவே நடப்பது போல் நடக்கும். ஆனால் எல்லாம், நங்கு திட்டமிடப்பட்டது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்குப் போன்ற தொழில்நுட்ப மையங்களில் உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், வியாபார ரகசியங்கள், அரசின் ரகசியங்களை கண்டறிய அழகிய பெண்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர். காதல், பழக்கவழக்கத்துடன் தொடங்கும் இதனை சில நேரங்களில் நீண்டகாலத் தொடர்பில் இருப்பதற்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதுவரை கொண்டுசெல்லலாம் என்கின்றனர்.

California

இந்த உளவாளிகள் பெரு நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்-அப்கள் வரை பணியாற்றும் எஞ்சினியர்களைக் குறிவைக்கின்றனர். உடலுறவை அதன்பாலான நம்பிக்கையைப் பயன்படுத்தி உளவுபார்த்தல் sexpionage என அழைக்கப்படுகிறது.

பாமிர் கன்சல்டிங்கின் (அமெரிக்காவுக்கு சீனா தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம்) தலைமை புலனாய்வு அதிகாரி ஜேம்ஸ் முல்வெனான், "ஒரே மாதிரியான கவர்ச்சிகரமான இளம் சீனப் பெண்களிடமிருந்து எனக்கு மிகவும் அதிகப்படியான லிங்க்ட்-இன் கோரிக்கைகள் வருகின்றன" எனக் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கலாச்சார ரீதியாகவும் சட்டரீதியாக இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது என்பதனால் உடலுறவைக் கருவியாக பயன்படுத்துவதில் சீன தரப்புக்கு அதிக பலம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

புதிய உளவு வழிமுறை!

மற்றொரு உளவுத்துறை அதிகாரி, சீனப் பெண் ஒருவர் அமெரிக்க ஏரோஸ்பே இஞ்சினியரை மணந்ததாகக் கூறியுள்ளார். முக்கியமான, ரகசியமான புராஜெக்ட்களில் வேலை செய்யும் அந்த நபரைக் கவர்ந்து அவர் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு, நீண்டகாலமாக தகவல்களைத் தெரிந்துகொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Chinese Woman
Young Chinese Professional

சீனா, சாதாரண குடிமக்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், கிரிப்டோ ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை உளவாளிகளாகப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு போட்டியாக ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் வருடத்துக்கு சுமார் 600 பில்லியன் டாலர் வரை (ரூ.50 லட்சம் கோடி) இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் சீன முதலீட்டாளர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஸ்டார்ட்-அப்கள் ஐடியாவை இழந்துவிடும் அபாயம் உள்ளது அல்லது சீனாவுக்கு இடத்தை மாற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

உளவுக்கு இறையாகும் Silicon Valley!

சிலிக்கான் பள்ளத்தாக்கு ஒரு கண்டுபிடிப்புகளின் கூடம். உலகம் முழுவதும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரம் சிலிக்கான் பள்ளத்தாக்கு.

Silicon Valley
Silicon Valley

நாளைய உலகில் நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இடம். இங்கு உளவு பார்த்து தாக்குதல் தொடுக்கப்போவது இல்லை என்றாலும் தொழில்நுட்பத்தில் அடுத்த மிகப் பெரிய விஷயம் என்ன என்பதை அறிந்துகொள்வது, உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செய்ய உதவும். இதனால் மிக மிகப் பரவலாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் அழகான சீன/ரஷ்ய பெண்கள் உளவாளிகளாக சுற்றி வருகின்றனர் என எச்சரிக்கிறது அமெரிக்க உளவுத்துறை.

கலிஃபோர்னியாவில் பல இன, கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வாழ்வது உளவுபார்ப்பவர்களுக்கு பணியை எளிமையாக்கி விடுகிறது. அதிபர் ட்ரம்ப்பின் வெளிநாட்டு குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அதிகபட்ச எதிர்ப்பு எழுந்தது கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்துதான். மாகாண ஜனநாயகக் கட்சி அரசு வெளிநாட்டு இன மக்களுக்கும் ஆதரவாக இருப்பதனால் இந்த உளவாளிகளைப் பற்றிய தகவல்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாகாண அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

Bihar: முதல்வர் வேட்பாளர் யார்? பிரசாரம் தொடங்கிய மோடி; NDA-வில் முடியாத சிக்கல்!

தேர்தல்பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் கரூர் விசிட் கேன்சல்?' - பின்னணி என்ன?

'கரூர் திட்டம் ரத்து?'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கரூர் விசிட் ப்ளான் கேன்சல் செய்யப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" - செல்லூர் ராஜு சாடல்!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர்.... மேலும் பார்க்க

SIR: `தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ - தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.... மேலும் பார்க்க

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க