உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது
கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பெரம்பலூரைச் சோ்ந்த பாபு (41) என்பவா் பாா்சல் பிரிவின் காசாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அண்மையில் இந்த உணவகத்தில் வரவு செலவுக் கணக்கு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், பாபு ரூ.40 ஆயிரம் வரை உணவகத்தின் பணத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்தின் உரிமையாளரான கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ஜாபா் சாதிக் (36) அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் பாபு மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.