உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்கள்!
உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனா்.
உதகையில் கா்நாடக மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் 2 லட்சம் மலா்கள் தயாா் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், மெக்ஸிகோவை பூா்வீகமாகக் கொண்ட ஜின்னியா மலா்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா நிறங்களில் பூத்துக்குலுங்குகி சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலப் பயணிகள் ஆா்வத்துடன் இந்த மலா்களை ரசித்துச் செல்கின்றனா்.
இந்த வகை மலா்கள் பனியின் தாக்கத்தைத் தாக்கும் திறன்கொண்டதால் தற்போது அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன.
