செய்திகள் :

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: உயா்நீதிமன்றம் விளக்கம்

post image

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் விளக்கமளித்தது.

கோடை காலத்தில் உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூா் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அடங்கிய அமா்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

உதகைக்கு வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாள்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

கடும் எதிா்ப்பு: இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிா்ணயித்துக் கொள்ளலாம் என்றும், இ- பாஸ் நடைமுறையால் உள்ளூா் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு எண்ணிடப்படாததால் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு: இந்நிலையில், இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசு தலைமை வழக்குரைஞா், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வில் முறையிட்டாா். இதைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமா்வு, செவ்வாய்க்கிழமை வழக்குகளை விசாரிக்கும் என்பதால், அரசின் மறு ஆய்வு மனு அன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா். மேலும், உயா்நீதிமன்றம் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும், வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

புதுச்சேரி- திருப்பதி இடையே ரயில்கள் ரத்து!

புதுச்சேரி-திருப்பதி இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரி-திருப்பதி இடையே இன்று மதியம் 3 மணி இயக்கப்படும் ர... மேலும் பார்க்க

9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு!

2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவிகித உண்மை வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவே... மேலும் பார்க்க

வெற்றி நடையில் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்ததைப் பாராட்டி பதிவிட்டுள்ளார், முதல்வர் மு.க. ஸ்டாலின்.மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2024 - 25 ஆம் ஆண்டின் மாநில வளர்ச்சி ... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில்.. அப்புறம் என்ன?

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில், மீண்டும் பின்னோக்கி வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. மேலும் பார்க்க

அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!

அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் தீப்பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் 4 தளங்கள் கொண்ட தனியார் ஷோரூம்... மேலும் பார்க்க

ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!

கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியர், பணிநிமித்தம் காரணமாக ஒருவயது குழந்தையுடன் கேரளத்தில் உள்ள ... மேலும் பார்க்க