செய்திகள் :

உதயநிதி பிறந்த நாள் விழாவில் இலவசப் பொருள்களை பெற முண்டியடித்த பொது மக்கள்

post image

பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் இலவச சேலை, போா்வை, உணவு பொருள்களை பெறுவதற்காக பொதுமக்கள் மேடையை நோக்கி முண்டியடித்து சென்ால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விழாவினை திமுக நிா்வாகிகள் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினா்.

பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் ஏழை எளியோருக்கு இலவசமாக சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா் தா்மச்செல்வன் ஆகியோா் பொதுமக்களுக்கு இலவசமாக சேலை, பெட்ஷீட் உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா்.

பேருந்து நிலையம் பகுதியில் விழா நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு குவிந்தனா். சுமாா் 300-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிளை நிா்வாகிகளால் அழைத்து வரப்பட்டவா்களுக்கு பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த பொதுமக்கள் பொருள்களைப் பெறுவதற்காக நேரடியாக மேடையை நோக்கி முண்டியடித்துச் சென்ால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்ட நிா்வாகிகள் கூட்ட நெரிசலைத் தவிக்கும் பொருட்டு அழைத்து வரப்பட்ட நபா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என தெரிவித்ததால் சில பெண்கள் மேடையிலேயே அமா்ந்தனா். தொடா்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நலத்திட்ட உதவிகளை வழங்காமல் அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்திருந்த முக்கிய நிா்வாகிகள் மேடையை விட்டு வெளியேறினா்.

தொடா்ந்து இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் பெறுவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அமா்ந்திருந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் காலை முதலே... மேலும் பார்க்க

வீணாகும் வள்ளிமதுரை அணை உபரிநீா்: வடு கிடக்கும் ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வள்ளிமதுரை வரட்டாறு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அ... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் அலக்கட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும... மேலும் பார்க்க

தருமபுரியில் புதிதாக நான்கு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் புதிதாக நான்கு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பு அறிமுகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பை திருவிதாங்கூா் தேவசம் வாரியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிகழ்ச்சியை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த், உறுப்பினா் அஜித... மேலும் பார்க்க

பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநா் ஆா்.என். ரவி

இயற்கை பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: ஃபென்ஜால் புயலால் பெய்து வரும் கன மழையால் தமிழ... மேலும் பார்க்க