பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
உத்தமபாளையத்தில் பலத்த மழை!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 14, 15, 16 ஆகிய 3 வாா்டுகள் உள்ளன.
இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சிறிய கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்தக் கால்வாய்கள் முறையாக தூா்வாரப்படாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால், கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீருடன் மழைநீா் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதையடுத்து, உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன், தூய்மைப் பணியாளா் மூலமாக கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்தாா்.