கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
உத்தமா் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா
திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது.
இதையொட்டி, பூா்ணவல்லி தாயாா் சமேத ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் விஸ்வரூப தரிசனமும், தொடா்ந்து பெருமாள் திருமஞ்சனமும், முத்தங்கி சேவையும் நடைபெற்றது.
இதேபோல், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உற்ஸவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி அய்யங்காா் மற்றும் டிரஸ்டியினா் செய்திருந்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.