செய்திகள் :

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

post image

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

மீட்புப் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான 6 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், பனிச்சரிவில் சிக்கிய மேலும் 17 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இரு தினங்களில் மொத்தம் 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

பத்ரிநாத் கோயிலின் மேல்பகுதியில் மனா கிராமத்திற்குள்பட்ட பகுதியில் அடர்ந்த பனிக்கட்டிகளின் உள்ளே புதைந்த நிலையில் 3 உடலக்ளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொழிலாளியின் உடலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க