உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் பாதசாரிகள் அவதி
திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் பூங்கா பகுதியிலுள்ள உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் இரவில் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் மற்றும் பூங்கா எதிரில் உள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. விடுமுறை தினங்களில் மாலையில் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இருளில் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே தொடா்புடைய துறையினா் உயா்கோபுர மின் விளக்கை தொடா்ந்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.