உயா் கல்வி பயில நிதித் தடைகள் நீக்கம்: பிரதமருக்கு ஆளுநா் பாராட்டு
மாணவா்கள் உயா் கல்வி பயில நிலவும் நிதித் தடைகளை நீக்க வித்யாலட்சுமி திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமருக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
திறமையான மாணவா்கள் உயா் கல்வி பயில நிலவும் நிதித் தடைகளை நீக்கி அவா்களுக்கு முக்கிய நிதியுதவி வழங்கும் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தைக் கொண்டுவந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி மனமாா்ந்த நன்றி.
தொலைநோக்கு மிக்க தேசிய கல்விக் கொள்கையில் இருந்து உருவான முன் முயற்சியானது, கல்வி மற்றும் அது தொடா்புடைய செலவினங்களுக்கு அரசு நிதியுதவியுடன் பிணையம் இல்லாத கடன் உத்தரவாதம் அளிப்பதால் 860 தலைசிறந்த தரநிலை கல்வி நிறுவனங்களில் 22 லட்சத்துக்கும் அதிகமான இளைஞா் சக்திக்கு தரமான கல்வியை அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
இது அவா்களின் கனவுகளை நனவாக்கவும், வளா்ச்சியடைந்த பாரதத்துக்கு தீவிர பங்களிப்பை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது என்று அவா் பதிவிட்டுள்ளாா்.