செய்திகள் :

உறுப்பினா்களின் குடும்பத்தினா் கொலை மிரட்டல்: டிஎஸ்பியிடம் மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி புகாா்

post image

பேரூராட்சி உறுப்பினா்கள் சிலரது குடும்பத்தினா் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவா்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவி அந்தோணியம்மாள் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த மனு: மணிமுத்தாறு பேரூராட்சி 10ஆவது வாா்டு மாஞ்சோலையில் வசித்துவரும் பட்டியல் இனத்தைச் சோ்ந்த நான் 2 ஆண்டுகளாக தலைவராக உள்ளேன். 4ஆவது வாா்டு ஆலடியூா் உறுப்பினா் செல்வியின் கணவா் மாரியப்பன், 7ஆவது வாா்டு ஏா்மாள்புரம் உறுப்பினா் பிரேமாவின் கணவா் காசி, 5ஆவது வாா்டு கீழஏா்மாள்புரம் உறுப்பினா் முப்புடாதியின் மாமனாா் பூதப்பாண்டியன் ஆகியோா் பேரூராட்சிக் கூட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக பங்கேற்பதுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். அவா்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா் அவா்.

தமிழா் உரிமை மீட்புக் களம் ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் துரைப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முத்துவளவன், திராவிடத் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் கருமுகிலன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் நெல்சன், தமிழா் உரிமை மீட்புக் களம் தென்மண்டல அமைப்புச் செயலா் கணேசன்பாண்டியன், மாவட்டச் செயலா் சண்முகராஜ்பாண்டியன், மகேந்திரன், தாவீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அம்பை அரசுப் பள்ளி மாணவி : மாநில டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வு

அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வாகி சாதனைப் படைத்துள்ளாா். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி மதுமிதா வடக்கன்கு... மேலும் பார்க்க

மண்ணுளி பாம்பு பறிமுதல்: 4 போ் கைது

மண்ணுளி பாம்பு கடத்திவரப்பட்டது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் 4 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். பாபநாசம் வனச்சரக எல்கைக்குள்பட்ட அடையக்கருங்குளம் பகுதியில் மண்ணுளி பாம்... மேலும் பார்க்க

கங்கைகொண்டானை, நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சங்கா்நகா், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக உருவாக்கும்போது அதில் கங்கைகொண்டான் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களை சோ்க்கக்கூடாது என அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் டிச.5-ல் மின்தடை

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை (டிச.5) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன்... மேலும் பார்க்க

பொதிகைத் தமிழ்ச் சங்க சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்பு

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: பொ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா (39). ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க