இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்க...
உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரா்களுடன் மோடி சந்திப்பு
கடந்த 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரா்களைப் பிரதமா் மோடி சனிக்கிழமை சந்தித்தாா்.
இலங்கைத் தலைநகா் கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரா்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அணி விளையாட்டை நேசிக்கும் எண்ணற்றவா்களை கவா்ந்திழுத்தது என்றாா்.
1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இலங்கை வீழ்த்தி கோப்பையை வென்றது.