உலகக் கோப்பை தகுதிச் சுற்று: காயத்தினால் நெய்மர் விலகல்!
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ஆர்ஜென்டினாவுடனான பிரேசில் போட்டியிலிருந்து நெய்மர் விலகியுள்ளார்.
சமீபத்தில் 17 மாதங்களுக்குப் பின் முன்னாள் கேப்டன் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர்.
சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் சன்டோஷ் போட்டியில் நெய்மர் விளையாடவில்லை. இடது தொடையில் காயமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் என்ட்ரிக் நெய்மருக்கு பதிலாக விளையாடவுள்ளார்.
தென்னமரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில் கொலம்பியாவை மார்ச்.20ஆம் தேதி சந்திக்கிறது. அடுத்த 5 நாள்களில் ஆர்ஜென்டினாவை சந்திக்க இருக்கிறது.