செய்திகள் :

``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.." - விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் பதிவு வைரல்!

post image

கூமாபட்டி... திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த வீடியோவில் காட்டப்படுவது போல தற்போது அந்த கிராமம் இல்லை எனவும், ஆறுகள் வறண்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்.

கூமாபட்டியில் கலெக்டர் ஜெயசீலன்
கூமாபட்டியில் கலெக்டர் ஜெயசீலன்

இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள கூமாபட்டியில் இருந்து விடைபெறும் கலெக்டர் ஜெயசீலன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவு வைரலாகி உள்ளது.

அதில், ``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன். கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர்.

கூமாபட்டி பழைய புகைப்படம்
கூமாபட்டி பழைய புகைப்படம்

பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து ‌எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.

தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே‌! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌ இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!" என்று குறிப்பிட்டுள்ளார்.

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி

அந்த மாவட்டத்துக்காரர்களால்கூட பெரிதாக அறியப்படாத ஊர். ஆனால், அந்த இளைஞரின் வீடியோவால் ‘கூமாபட்டி’ என்கிற அச்சிறிய கிராமம், வேர்ல்டு லெவல் ஃபேமஸ் ஆகி இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்க... மேலும் பார்க்க

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க

Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தன... மேலும் பார்க்க