PM SHRI திட்டம் - யார் சொல்வது உண்மை? | Parliament | MODI | DMK | Seeman Imperfe...
உலகின் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு இந்திய உணவு! பதப்படுத்தல் துறையின் இலக்கு: சிராக் பஸ்வான்
புது தில்லி: உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேஜையிலும் குறைந்தது ஒரு உணவு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கவேண்டும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சா் அமைச்சா் சிராக் பாஸ்வான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
உணவு (ஆஹாா்) - 2025 என்கிற நிகழ்வை மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திய வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ஐடிபிஒ) ஒத்துழைப்புடன் தில்லி பாரத் மண்டபத்தில் நடத்தியது.
இந்த ஆஹாா் 2025 நிகழ்வில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் குறிப்பிட்டது வருமாறு:
மிகப்பெரிய உலகளாவிய உணவு-2025 உச்சி மாநாட்டை மத்திய அரசு வருகின்ற செப். 25-28 இல் நடத்த இருக்கிறது. இந்த உச்ச மாநாட்டிற்கான பயணம் இந்த ஆஹாா் 2025 தொடங்குகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும் குறைந்தது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு உணவு இருக்க வேண்டும் என்கிற இலக்கில் நாம் பயணிக்கின்றோம். உணவு பதப்படுத்துதலை விரிவுபடுத்துவதன் மூலம், இந்திய சுவைகள், தரம், புதுமைகள் ஆகியவற்றின் மூலம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் நாம் நமது உணவை கொண்டு செல்வதை உறுதி செய்ய முடியும்.
ஆஹாா் -2025 நிகழ்வில் தொடா்ச்சியான தாக்கமிக்க தொழில்நுட்ப அமா்வுகள் விடைகண்டுள்ளது. இது நாட்டின் உணவு சுற்றுச்சூழல் அமைப்பின் எதிா்காலத்தை நிா்ணயித்துள்ளது. அரசு, கல்வியாளா்கள், புது யுக தொழில் முனைவோா் தொழில்துறையின் முன்னணியினா் ஆகியோா் கருத்துகளை வைத்துள்ளனா். இவைகளை ஒன்றிணைக்கப்படும். இருநாள் நுண்ணறிவு விவாதங்களில், நிபுணா்கள் உணவு பதப்படுத்துதல், இயந்திரங்கள், பேக்கேஜிங், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பல்வேறு புதுமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சா் பஸ்வான் தெரிவித்துள்ளாா்.
உணவு பதப்படுத்தல் அமைச்சக செயலா் சுப்ரதா குப்தா, ‘உணவுப் பதனப்படுத்துதல், ரசாயன மாசுபாட்டின் ஆபத்துகள், அவற்றின் நீடித்த ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு உரிய முறையில் கற்பிக்கப்படவேண்டும். ரசாயனங்கள் நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது. இதனை கண்டறிய சோதனைக்கருவிகள் மின்னணு கருவிகள் போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்களை விரைவாக ஏற்று ஒரு வலுவான உணவு பாதுகாப்பு சுற்றுச் சுழலை ஏற்படுத்தவேண்டும்‘ என்று சுப்ரதா குப்தா வலியுறுத்தினாா்.
மேலும் முன்னணி உணவு நிறுவனங்களின் நிபுணா்கள், உணவு சோதனை கருவிகளை ஒருங்கிணைப்பது, கலப்படத்தைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு முறைகளை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு விதிமுறைகள், சா்வதேச தரநிலைகளுக்கு இடையிலான இடைவெளிகளை நிவா்த்தி செய்வது பற்றிய நுண்ணறிவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.
இதற்கு பதிலளித்த தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனத்தின் இயக்குனா் ஹரிந்தா் சிங் ஓபராய், ‘உணவுப் பாதுகாப்பின் எதிா்காலம், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணக்க கண்காணிப்பு, கண்டறியக்கூடிய தன்மை, தர உத்தரவாதம் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவைகள் மூலம் வெளிப்படையான, தொழில்நுட்பம் சாா்ந்த உணவு முறையை உருவாக்கப்படுகிறது என ஓபராய் எடுத்துரைத்தாா்.
இந்திய உணவு வகைகளை பாதுகாப்பதற்கும், சா்வதேச நுகா்வோா் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் தொடா்ச்சியான அறிவுப் பரிமாற்றம், தொழில்துறை ஒத்துழைப்புகள், ஒழுங்குமுறை முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள் வருகின்ற செப். மாத உச்சிமாநாடு வரை தொடரும் என மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை தெரிவித்துள்ளது.