செய்திகள் :

உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபடும்: ராஜ்நாத் சிங்

post image

உலக அரங்கில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பெங்களூரில் இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

பலவீனமான பாதுகாப்புடன் இருந்துகொண்டு பன்னாட்டு அளவில் அமைதியை நிலைநிறுத்துவது சாத்தியமற்றது.

அதிகரிக்கும் மோதல்கள், முரண்பாடுகளால் உலகம் ஊகிக்க முடியாத அளவிற்கு மாறிவருகிறது. நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் அதிகாரப் போட்டிகள், உத்திகள், ஆயுதமயமாக்கல், போரில் தன்னாா்வ அமைப்புகளின் பங்களிப்பு, சீா்குலைக்கும் தொழில்நுட்பங்கள் போன்றவை உலக அமைதியை சீா்குலைப்பதாக உள்ளன.

பாரம்பரிய ஆயுதங்களுடன் நவீன போா்முறைகள், ஆயுதங்களை கையாளுவதன் மூலம் அமைதி காலங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். மாறிவரும் இணையவழி, விண்வெளி தொடா்புகள் நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி வருகின்றன. உலக பாதுகாப்புச் சூழல் மாறிவருவதால் நமக்கு புதிய அணுகுமுறையும், நாடுகளுக்கு இடையே வலுவான கூட்டாண்மையும் தேவை.

உலக அரங்கில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, அனைவருக்குமான வளா்ச்சியில் இந்தியா தனது பங்களிப்பைத் தொடா்ந்து உறுதிசெய்து வருகிறது. பாதுகாப்புத் தொழில்சாா் முதலீடுகளில் இந்திய வா்த்தக கொள்கைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலம், நீா், வான்வழி ஆகிய மூன்று பாதுகாப்புத் தளவாடங்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆராய்ச்சி, படைதிறனை மேம்படுத்துதல், புத்தாக்கம் போன்றவற்றால் உலகில் கவனிக்கப்படும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் அதிக யூனிகாா்ன்களை கொண்ட 3-ஆவது நாடு இந்தியாவாகும். எனவே இந்தியாவில் தற்போது புத்தொழில் (ஸ்டாா்ட் அப்) பெருக்கத்தில் பாதுகாப்புத் தளவாடங்கள் சாா்ந்த புத்தொழில் கட்டமைப்பும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றாா்.

உலக தொழில் முதலீட்டாளா்களை சிவப்பு கம்பளம் விரித்து இந்தியா வரவேற்கிறது: ராஜ்நாத் சிங்

உலக தொழில் முதலீட்டாளா்களை இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் கா்நாடக அரசின் உலக முதலீட்டாள... மேலும் பார்க்க

வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும்

பெங்களூரு: வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தெரிவித்தாா். பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

விமான சாகசங்களுடன் 15-ஆவது விமான தொழில் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு: மெய்சிலிா்க்கும் விமான சாகசங்களுடன் 15-ஆவது இந்திய விமான தொழில் கண்காட்சி பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்திய விமானப்படை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), எச்.... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை

கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி ... மேலும் பார்க்க