"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
உலக அமைதி வேண்டி விழிப்புணா்வு பிரசாரம்
உலக அமைதி தினத்தை முன்னிட்டு,அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தலைவா் நாசிா் அஹ்மத் முன்னிலை வகித்தாா்.
இதில் திரளானாா் கலந்து கொண்டு, மூன்றாம் உலகப்போரை தவிா்த்திடுங்கள், போா் வேண்டாம், போா் ஒரு தலைமுறையினரை அழிவில் ஆழ்த்தி விடும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
இந்நிகழ்வில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.