செய்திகள் :

உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: ஜப்பான் இணைக்கு பட்டம்

post image

உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ் தொடரில் மகளிா் இரட்டையா் பிரிவில் ஜப்பான் இணை பட்டம் வென்றது. ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு முன்னேறி மானவ் தாக்கா் சாதனை படைத்தாா்.

இரட்டையா் பிரிவு:

ஆடவா் இட்டையா் பிரிவில் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜோங்-ஹூன், ஆன் ஜே-ஹியூன் ஜோடி 3-1 செட் கணக்கில் ஜப்பானின் டோமோகாசு ஹரிமோட்டோ, சோரா மட்சுஷிமா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

மகளிா் பிரிவு இறுதியில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ, மியு கிஹாரா ஜோடி 3-2 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஷின் யு பின், ரியு ஹன்னா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

மானவ் தாக்கா் அபாரம்:

காலிறுதியில் கொரியாவின் ஓ ஜுன்-சங் 3-1 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டொமிஸ்லாவ் புக்காரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இந்தியாவின் சினேஹித் 1-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் திபோ பொரெட்டிடம் தோல்வி அடைந்தாா்.

அதேவேளையில் இந்தியாவின் மானவ் தாக்கா், 16-ம் நிலை வீரரான கொரியாவின் லிம் ஜொங் ஹூனை எதிா்த்து விளையாடினாா். இதில் மானவ் தாக்கா் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினாா். இதன் மூலம் கன்டென்டா் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரா் என்ற வரலாற்று சாதனையை படைத்தாா் மானவ் தாக்கா். பிரான்ஸின் ஃபிளேவியன் காட்டன் 3-0 என டென்மாா்க்கின் ஜோனாதன் கிரோத்தை வீழ்த்தினாா்.

மகளிா் பிரிவு கொரியாவின் ஷின்யு பின், ஜப்பானின் ஹஷிமோட்டோ மிவா ஹரிமோட்டோ, கிம நயோங் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறினா்.

அதிக திரைகளில் வெளியாகும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்!

நடிகர் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் அதிக திரைகளில் வெளியாகிறது.நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி க... மேலும் பார்க்க

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

சின்ன திரை நடிகை மதுமிதா படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது தொடர்பான விடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்ததன்... மேலும் பார்க்க

வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

சின்ன திரை நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கும் ஆடுகளம் தொடர், வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் ஏப். 8ஆம் தேதி திங்கள் கிழமைமுதல் இரவு 10 மணிக்கு ஆடுகளம் தொடர் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

ஸ்பானிஷ் கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்!

ரியல் மாட்ரிட் கால்பந்து ஆடவர் அணி ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்றது. கோபா டெல் ரே எனப்படும் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 2 போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் ரியல் சோசிடாட்அணியும் ... மேலும் பார்க்க

சமந்தா கோவிலில் குடும்பத்துடன் வழிபடும் மக்கள்!

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலில் தொடர் வழிபாடு நடைபெற்று வருகிறது.இந்தியளவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சென்னையைச் சேர்ந்தவரான இவர் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்... மேலும் பார்க்க

பி.கே. ரோஸி திரைப்பட விழா..! அனுமதி இலவசம்!

நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்பட விழாவையும் நடத்தி வருகிறார். பி.கே.ரோஸி திரைப்பட விழா இன்று (ஏப்.2) காலை 9 மணிக்கு சென்னையில் சாலிகிரா... மேலும் பார்க்க