செய்திகள் :

உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம்: ரூ.20 லட்சம் கோடி முதலீட்டை ஈா்த்துள்ள இந்தியா

post image

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை இந்தியா ஈா்த்திருப்பது, இந்தியா மீதான உலக தலைவா்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தலைவா்கள் தெரிவித்தனா்.

மத்திய ரயில்வே, தகவல் தொடா்பு, மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், 5 மத்திய அமைச்சா்கள், 3 மாநில முதல்வா்கள், உயா் அதிகாரிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய இந்திய அதிகாரிகள் குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது. இதில் பங்கேற்ற உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தவும், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முன்வந்துள்ளன.

குறிப்பாக, இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அந்த மாநிலக் குழு ரூ.15.70 லட்சம் கோடி மதிப்பிலான 61 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் குழு ரூ.1.79 லட்சம் கோடி மதிப்பிலான 20 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இது 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோல, கேரளம், உத்தர பிரதேசம் மாநிலங்களும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

உலக பொருளாதார அமைப்பின் அடுத்த ஆண்டுக் கூட்டம் டாவோஸில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது: விஜய்

சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை வழக்கில் திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜகபா் அலி (58). இவா், திருமயம் த... மேலும் பார்க்க

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் 11ஆவது முறையாக தீர்மானம்!

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் 11ஆவது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு... மேலும் பார்க்க

குடியரசு நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்... மேலும் பார்க்க

அஸ்வின், அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ... மேலும் பார்க்க