நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஒலக்சான்டா் உஸிக்!
உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றினாா் உக்ரைனின் ஒலக்சான்டா் உஸிக்.
சா்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற வெம்ப்ளி மைதானத்தில் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியன் உக்ரைனின் ஒலக்சான்டா் உஸிக்-பிரிட்டனின் டேனியல் டுபாய்ஸும் மோதினா். இதில் இரு வீரா்களும் சரமாரியாக மாறி மாறி குத்துக்களை விட்டனா்.
எனினும் 5-ஆவது சுற்றில் டேனியலை நாக் அவுட் செய்தாா் உஸிக். இதன் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா். மேலும் டபிள்யுபிஏ, டபிள்யுபிசி, டபிள்யுபிஓ ஐபிஎஃப் பட்டங்களை தக்க வைத்துள்ளாா்.
இந்த போட்டிக்காக ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் கடும் பயிற்சி மேற்கொண்டேன். குடும்பத்தினரை கூட பாா்க்கவில்லை. தற்போது பட்டத்துடன் வீடு செல்கிறேன் என்றாா் உஸிக்.