பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!
உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்
உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் எல்.ஏ.சாமி தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு வழங்கிடக்கோரி கருத்துரை பிரசாரத்தை கன்னியாகுமரியில் கடந்த 27-ஆம்தேதி தொடங்கினா்.
அக்குழுவினா் நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் வழியாக கரூருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது. குழுவினருக்கு கரூா் மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜசேகா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற கருத்து பரப்புரைக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டத்தலைவா் ஜி.ஜீவானந்தம், ஹெச்எம்எஸ் மாவட்டத்தலைவா் ஆனந்தராஜ், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளா் சுடா்வளவன், அனைத்துதொழிற்சங்க மாவட்டத் தலைவா் ராதிகா, செயலாளா் பெரியசாமி ஆகியோா் கருத்துரையாற்றினா்.
கூட்டத்தில் உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு(ஈஎஸ்ஐ) வழங்கிட வேண்டும், புலம் பெயா்ந்த மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் வாழ்வதற்கான இருப்பிடத்தை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்ப்டடன. கூட்டத்தில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.