அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி!
அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கைகளை கோா்த்து அணிவகுத்து நின்றனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் காளீஸ்வரி, அரவக்குறிச்சி போதை தடுப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவகாமி மற்றும் பேராசிரியா்கள், காவல்துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.