செய்திகள் :

உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணறை ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் இருந்த படிக்கிணறை சுத்தம் செய்து அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டதில் 1957ல் பயன்படுத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான சுரங்கம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கமானது மூன்று நிலைகளைக் கொண்டு, 400 சதுர மீட்டர் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில தளங்கள் மார்பள் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது என்று சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா தெரிவித்துள்ளார்.

பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் இந்த சுரங்கம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இந்த சுரங்கம் முழுவதும் மண்ணுக்கடியில் மூடியிருந்ததாகவும் தற்போதைக்கு 210 சதுர மீட்டர் இடம்மட்டுமே வெளியில் இருக்கிறது. சுரங்கம் உள்ள மற்றப் பகுதிகள் அனைத்தும் ஆக்ரமிப்புக்குள் உள்ளது. ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக அகழாய்வுப் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தக் கோவில் குறித்துப் பேசிய அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அதில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்தக் கிணறு மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பழைய எல்லை வளாகத்துக்குள் இந்தக் கிணறு அமைந்துள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே,

உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுப் பணிகளின் விளைவாக ஐந்து தீர்த்தங்கள், 19 தீர்த்தக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதி சுமார் 24 ஏக்கரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு குடிமகனையும் காப்பது அரசின் கடமை: கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!

இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை சார்பில் இன்று(டிச. 23) ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் மாலை... மேலும் பார்க்க

பழைய கார்களின் விலை உயருமா? ஜிஎஸ்டி உயர்கிறது..!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: 2025 பிப். 1, சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்படவுள... மேலும் பார்க்க

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி!

மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச. 10 ஆம் தேதி அம்பேத்கர் சிலை அர... மேலும் பார்க்க

வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப்பின் அமைந்துள்ள இடைக்கால அரசு, தூதரக ரீதியாக இந்தியாவிடம் இது குறி... மேலும் பார்க்க