முதல்வா் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
உ.பி.யில் முஸ்லிம் இளைஞரிடம் அட்டூழியம்: ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்!
மீரட்: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மீரட் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குல்ஃபாம் என்ற இளைஞரை வழிமறித்த 3 இளைஞர்கள், அவரை அருகிலிருக்கும் பூங்காவுக்குள் அழைத்துச் சென்று, அங்கே அவரது ஆடைகளை களைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ நாமத்தை உச்சரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இளைஞரை சரமாரியாக அடித்து தாக்கிவிட்டு அவரிடமிருந்த கைப்பேசியையும் பறித்துச் சென்றுவிட்டனர். அதில் மயக்கமடைந்த குல்ஃபாமை அதன்பின், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், பாதிக்கப்பட்ட இளைஞர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஜெபிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறினர். முன் விரோதம் காரணமாக அவர் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை தேடி வருவதாகவும் அவர்கள் மூவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் குல்ஃபாம் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.