ஊஊஊ... வடிவேலுவுடான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!
நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலுவின் விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர்கள் வடிவேலு, பிரபு தேவா இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தை, சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சோம்பி (zombie) கதையாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், வடிவேலுவுடன் காரில் செல்லும்போது அவர் பாடிய பாடலைக் கேட்டு மகிழும் விடியோவை பிரபு தேவா பகிர்ந்துள்ளார்.
friendship❤️❤️❤️ pic.twitter.com/4IZC4ZJ2i5
— Prabhudheva (@PDdancing) August 26, 2025
இருவரின் நகைச்சுவைக் காட்சிகளை இன்றும் ரசிகர்கள் ரசித்துவருவதால் இந்த விடியோ ரசிக்க வைத்துள்ளது.
இதையும் படிக்க: ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!