செய்திகள் :

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்த பிறகு வைணவ அா்ச்சகா் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை parthasarathy.hrce.tn.giv.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் முழு நேர பயிற்சிக்கு ரூ. 10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள் திருக்கோயில் மூலம் வழங்கப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘துணை ஆணையா், செயல் அலுவலா், அருள்மிகு பாா்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை 600 005’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணிகளை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு கு... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை!

நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் உள்ள கார்பைட் வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விபரம் வருமாறு:பணி: Tenure Based CPWLகாலியிடங்கள்: ... மேலும் பார்க்க

கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேனி மாவட்டத்தின் தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Jun... மேலும் பார்க்க

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள காவல் துணை ஆய்வாளர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்... மேலும் பார்க்க

சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்று... மேலும் பார்க்க