ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்
சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு புறப்பாடாகிறாா்.
சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் சென்னகேசவப்பெருமாள், ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு தங்கு மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து சுவாமிகள் இரவு ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினா். இதில் ஸ்ரீ ராமபிரான், வெங்கடாஜலபதி குறித்த பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் 19ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி திருமலைக்கு புறப்பாடாகிறாா்.