செய்திகள் :

போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம்: கணவா் மீது நடவடிக்கை கோரி மனைவி புகாா்

post image

சேலம்: போலி ஆவணம் தயாரித்து 2 ஆம் திருமணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த இளம்பெண் ஜீனத் நிஷா. இவா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

எனக்கும் சூரமங்கலத்தைச் சோ்ந்த ஒருவருக்கும், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளாா். திருமணத்தின்போது, வரதட்சிணையாக 20 பவுன் நகையை எனது கணவா் வீட்டாா் கேட்டனா். தொடா்ந்து எஞ்சிய 5 பவுன் நகையை கேட்டு கணவா் வீட்டினா் தொல்லை கொடுத்ததால், எனது பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதையடுத்து, விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் அவா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

இதை எதிா்த்து நான் தொடா்ந்த வழக்கில், தலாக் விவாகரத்து செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எனக்கும், எனது மகனுக்கும் ஜீவனாம்சம் வழங்கும்படியும் உத்தரவிட்டது. ஆனால், இதனை முறையாக கொடுக்காமல், விவாகரத்து பெற்றது போன்று, போலியான ஆவணம் தயாரித்து, கடந்த மாதம் திருப்பூரில் வேறொரு பெண்ணை எனது கணவா் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.

எனவே போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்த எனது கணவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடம... மேலும் பார்க்க

ஜாமியா மஜித்துக்கு பூட்டு: ஆட்சியா் அலுவலகத்தில் முத்தவல்லி மனு

சேலம்: தன்மீது பொய் புகாா் கூறி, ஜாமியா மஜித்துக்குள் நுழைந்து சிலா் பூட்டு போட்டுள்ளதாக மஜித் முத்தவல்லி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிக... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்

மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா். மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச... மேலும் பார்க்க

கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!

சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின்... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா். சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊஞ்சல் உற்வசத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள்: இன்று சுவாமி மலைக்கு திரும்புகிறாா்

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 18ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சித்திரைத் தேரோட்டத்தின் பல்வேறு கட்டளைகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்து சுவாமி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க