செய்திகள் :

டெல்லி செல்வதாகத்தான் சொன்னார்; ஆனால் பாகிஸ்தான் சென்றது பற்றி... - யூடியூபர் ஜோதியின் தந்தை தகவல்

post image

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோடு, பாகிஸ்தானுக்கும் மூன்று முறை சென்று வந்ததாகவும் கைது செய்தபின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரீஷ் மல்ஹோத்ரா இது குறித்து அளித்த பேட்டியில்,''என் மகள் டெல்லி செல்வதாகச் சொல்லிவிட்டுதான் சென்றார். அவர் எங்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது. ஜோதி வீட்டில் வீடியோ தயாரிப்பார். எங்கள் மகள் பாகிஸ்தானுக்கு சென்றது எங்களுக்கு தெரியாது''என்று தெரிவித்தார். ஆனால் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டவுடன் அவரது தந்தை ஹரீஷ் அளித்த பேட்டியில், `` தனது மகள் வீடியோ எடுக்கத்தான் பாகிஸ்தான் சென்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இப்போது தன் மகள் பாகிஸ்தான் சென்றது தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜோதி மல்ஹோத்ரா தனது யூடியூப் சேனலில் 450க்கும் அதிகமான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தானில் இந்திய பெண், பாகிஸ்தான் சொகுசு பஸ்சில் இந்தியப் பெண் என தலைப்பிட்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதோடு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார். இப்பயணத்திற்கும், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் ... மேலும் பார்க்க

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காருடன் இளைஞர் எரித்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை

தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கிச்சுடும் தளம் உள்ளது. இதன் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொல... மேலும் பார்க்க

``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புகார் கொடுத்த தாய்

"என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்... மேலும் பார்க்க

வயநாடு: அனுமதி பெறாத தங்கும் விடுதி; பெண்ணின் தலையில் சரிந்த கூரை; சோகத்தில் முடிந்த சுற்றுலா

வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்குப் பிறகு சுற்றுலாத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வயநாடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை ... மேலும் பார்க்க