சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:
குறைகூற வேண்டும் என்பதற்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் விஜய் போன்றோா் திமுக அரசை விமா்சிக்கின்றனா். மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும். திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். எனவே இது பெண்களுக்கான ஆட்சி, பெண்களுடைய ஆட்சி.
மக்களவை தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்பதற்காகவே திமுக மேற்கொள்ளும் முயற்சிகளை பாஜக அரசு விரும்பாததால் திமுக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி அமைந்தது முதலே இதுபோல சோதனை நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
தமிழக அரசின் கடன் குறித்துப் பேசும் பாஜகவினா், மத்தியில் பாஜக அரசு பெற்றுள்ள ரூ. 81 லட்சம் கோடி கடன் குறித்துப் பேசுவதில்லை. இருமொழிக் கொள்கையைப் பொருத்தவரை, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவே தமிழகத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
திருச்சியில் புதிய பேருந்து முனையப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.