செய்திகள் :

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

post image

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியான இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோம். அதுவும் குறிப்பாக பக்கத்தில் இருக்கும் ’ஊட்டி’ தான் உடனே நம் நினைவிற்கு வரும்.

ஊட்டியில் பார்க்க தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், முதுமலை தேசிய பூங்கா என பல இடங்கள் இருந்தாலும், இந்த வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக ’கேர்ன்ஹில்’ உள்ளது.

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருப்பது குறித்து பலருக்கு தெரியவில்லை. எங்கு இருக்கிறது இந்த ’ஹிடன் ஜெம்’ வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

ஊட்டி

ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கேர்ன்ஹில். கேர்ன்ஹிலை இயற்கையின் செல்ல தொட்டி என்று அழைக்கின்றனர்.

இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த இடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வனப்பகுதிக்குள் சென்றதும் ஒரு குறுகிய சாலை காணப்படும். அதன் சிறிது தூரத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் இருக்கும்.

அங்கு நீங்கள் டிட்கெட் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் செல்லலாம். பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மலையேற்றம் செய்பவர்களுக்கு ₹350 வசூலிக்கப்படுகிறது.

மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பரிய வளைவு குடிலை இங்கு நீங்கள் காணலாம்.

பழங்குடியினர்களின் வாழ்வாதாரமாக தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் இங்கு இருக்கும். இவற்றில் தோடர் எம்ப்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

அங்கு இருக்கும் விளக்க மையத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி எப்படி இருந்தது என்றும் பல ஆண்டுகள் கழித்து உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எப்படி இருக்கிறது என்றும் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் காணலாம்.

இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம்.

கூடுதல் சிறப்பாக அந்த பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஏறி நடந்துசென்று மறக்கமுடியாத அனுபவத்தை பெறலாம்.

ஊட்டியில் இப்படி ஒரு மரம் இருக்கிறதா என்று அதனை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மணிகரண்: 24 மணிநேரமும் கொதிக்கும் இயற்கை வெந்நீர் ஊற்று; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது ஏன்?

பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிததலம் தான் மணிகரண். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. வெந்நீர் ஊற்றில் இயற்கையாகவே தண்ணீர் சூடாக கொதித்துக் கொண்டே இருக்குமாம்.இதனைப் பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக... மேலும் பார்க்க

நாகலிங்க வடிவில் அற்புத பாறை! மாதேஸ்வர மலைப் பயணம் குறித்து தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Passport: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்... இனி பாஸ்போர்ட் பெற இந்த சான்றிதழ் கட்டாயம்!

டிரிப், படிப்பு, வேலை... - எதற்கு வெளிநாடு செல்ல வேண்டுமானாலும், பாஸ்போர்ட் மிக அவசியம். சுற்றுலா முதல் அலுவல் நிமித்தமாக பல லட்ச மக்கள் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.... மேலும் பார்க்க

Tour: கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறீர்களா - இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் தனியார் வாகனங்களில் சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுற... மேலும் பார்க்க

₹ 1 -க்கு இவ்வளவு மதிப்பா? இந்திய ரூபாய் வைத்திருந்தால் இந்த நாடுகளில் நீங்கள் பணக்காரர் தான்!

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிடும் போது பணம் குறித்த கவலைகள் தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வ... மேலும் பார்க்க

டெல்டா பகுதிகளில் மழை... சட்டென மாறிய சூழல்.. | Photo Album

டெல்டா பகுதிகளில் மழைடெல்டா பகுதிகளில் மழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழை மேலும் பார்க்க